ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அதிக அளவில் உதவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், இந்தியாவில் உள்ள மைதானங்களை சொந்த மைதானங்களாக கருதுவதற்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.
இதனால் அயர்லாந்துக்கு எதிரான தொடரை ஆப்கானிஸ்தான் டேராடூனில் நடத்தியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு டி20 கிரிக்கெட் லீக்கை நடத்தி வருகிறது. இதையும் இந்தியாவில் உள்ள மைதானங்களில் நடத்த அனுமதி தர வேண்டும் என ஆப்கானிஸ்தான் கேட்டிருந்தது.
இந்நிலையில் நாங்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரை நடத்தி வருவதால், ஆலோசனை நடத்துவதற்கு உகந்தது அல்ல என பிசிசிஐ நிராகரித்துள்ளது.
0 comments:
Post a Comment