முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளைப் பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் பரிதாபகரமாக உயிரிழந்தார்
குறித்த சம்பவத்தில் மாமூலை முள்ளியவளைச் சேர்ந்த
கதிரவேலு -ஜெயராஜசிங்கம் வயது - 58 ,என்னும் 3 பிள்ளையின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
மாமூலை முள்ளியவளைப் பகுதியில் கடந்த 8ம் திகதி உழவு இயந்திரத்தில் மக்காட் பகுதியில் அமர்ந்திருந்து பயணித்துள்ளார். இதன்போது உழவு இயந்திரம் வற்றாப்பளைப் பகுதியில் பயணித்த சமயம் உழவு இயந்திரத்திரம் ஓர் பள்ளத்தில் பயணிக்கையில் உழவு இயந்திரத்தில் இணைத்திருந்த கலப்பை வீதியில் முட்டியுள்ளது. இதனால் உழவு இயந்திரம் சரிந்து வீழ்ந்துள்ளது.
இவ்வாறு உழவு இயந்திரம் வீழ்ந்த நிலையில் ணாரதியுடன் கூடப்பயணித்த இவரும் படுகாயமடைந்த நிலையில் காலை 9.30 மணியளவில் மாஞ்சோலை வைத்ரியசாலயில் அனுமதிக்கப்பட்டு மாலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே ஜெயராஜசிங்கம் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.
0 comments:
Post a Comment