அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை எதிர்கொள்ள தயார் என சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்க – சீன வர்த்தகப் போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. இதன்காரணமாக இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி செய்யப்படும் வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதித்து வருகின்றன.
இவ்வாறானதொரு சூழலிலேயே அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை எதிர்கொள்ளச் சீனா தயாராகவுள்ளது என சீனத் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்ஹே தெரிவித்துள்ளார்.
‘வர்த்தகப் போரைத் தொடங்கியது அமெரிக்கா. சீனாவைப் பொறுத்தவரை எங்கள் வாசல் திறந்திருக்கிறது. பேச்சுக்கும் தயார்..சண்டைக்கும் தயார். என அவர் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்.
னத் தற்காப்பு அமைச்சரின் குறித்த கருத்தானது தற்போது சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment