தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் யாழ்ப்பாணம் - உரும்பிராய் பொது சந்தையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை இடம்பெற்றது.
நிகழ்வில், அகவணக்கம் செலுத்தி, ஈகைச் சுடரை தியாகி சிவகுமாரின் சகோதரி ஏற்றி வைக்க, அவரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவேந்தல் செய்யப்பட்டது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன், கஜதீபன், தவராசா, ஆனந்தி சசிதரன் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment