தென் மத்திய ரெயில்வே அணி ‘சாம்பியன்’

அகில இந்திய கைப்பந்து போட்டி  சென்னையில் இடம்பெற்று வருகிறது. இதில், பெண்கள் பிரிவில் தென் மத்திய ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நெல்லை பிரண்ட்ஸ் கிளப், மருத்துவர் சிவந்தி கிளப் சார்பில் தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 

இதில் 6 ஆவது நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தென் மத்திய ரெயில்வே, (செகந்திராபாத்)-சாய் (தலச்சேரி) அணிகள் மோதின. 

 இந்த ஆட்டத்தில் தென் மத்திய ரெயில்வே அணி 25-20, 25-19, 25-21 என்ற நேர்செட்டில் சாய் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி 25-19, 25-21 என்ற நேர்செட்டில்  மருத்துவர் சிவந்தி கிளப் அணியை வீழ்த்தியது.

ஆண்கள் பிரிவில் நடந்த முதலாவது அரை இறுதியில் எஸ்.ஆர்.எம். அணி 20-25, 12-25, 25-18, 25-20, 15-11 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். அணியை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் சுங்க இலாகா (சென்னை) அணி 25-23, 22-25, 27-25, 22-25, 16-14 என்ற செட் கணக்கில் வருமான வரி (குஜராத்) அணியை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இன்று மாலை 5 மணிக்கு நடக்கவிருக்கும் இறுதி ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்.-சுங்க இலாகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment