சஹ்ரானின் தம்பி, குடும்பம் கொலையுண்டதால் சாய்ந்தமருது பிரபலமானது

சஹ்ரானின் குடும்பம் கொலையுண்டதால் சாய்ந்தமருது உலகில் பிரபலமானதாக இராணுவத்தின் 24ஆவது படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று -02- மாலை இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சஹ்ரானின் தம்பி குடும்பம் கொலையுண்டதால் சாய்ந்தமருது உலகில் பிரபலமானது. அச்சம்பவத்தால் நானும் பிரபலமானேன். சஹ்ரான் என்ற தனிநபர் செய்த காரியத்தால் இன்று முழு முஸ்லிம் சமூகமும் வேதனையிலுள்ளது.
சந்தேகத்தில் கைது செய்யப்படுபவர்களும் முஸ்லிம்களாக இருப்பதால் பயத்துடனும் உள்ளனர். அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக பார்க்க முடியாது. அப்படி யாரும் பார்க்கவுமில்லை.
சஹ்ரான் மரணித்த பிற்பாடு சொர்க்கத்திற்கு சென்றாரோ, எங்கு சென்றாரோ தெரியாது. 72 பெண்களுடன் வாழ்கிறாரோ தெரியாது. ஆனால் அவர் விட்டு சென்ற மனைவியை நாம் பாதுகாக்கிறோம். சஹ்ரானை அவர் விவாகரத்துச் செய்ய முயன்றிருக்கிறார்.
கடந்த 10 வருடங்களாக இந்த நாட்டில் மக்கள் எவ்வளவு சந்தோசத்துடன் நிம்மதியாக வாழ்ந்து வந்திருந்தார்கள். அதனை அந்த சஹ்ரான் தொலைக்க வைத்துள்ளார்.
அவர் எங்கு சென்றாரோ தெரியாது. ஆனால் இலங்கையில் வாழும் இப்போது இருக்க கூடியவர்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக நல்லிணக்கத்துடன் வாழவேண்டும்.
சமயத்தலைவர்கள் அதற்கு வழிகாட்ட வேண்டும். சகல சமயங்களும் மனிதன் வாழ்வாங்குவாழ நல்லவழிகளையே காட்டுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment