இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம் - இன்று எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தைத் திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும் மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும்.அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 5, 9
ரிசபம் - இன்று எதிலும் தயக்கம் காட்ட மாட்டீர்கள். நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்துச் செய்வது நல்லது. எந்தவொரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும்.அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 9
மிதுனம் - இன்று தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதிப் பிரச்சினை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும்.அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்:- 3, 6, 9
கடகம் - இன்று குடும்பத்திலிருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தைத் தரும்.அதிர்ஷ்ட நிறம்:- நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்:- 6, 9
சிம்மம் - இன்று பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்கள் எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்:- நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்:- 2, 7
கன்னி - இன்று மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள்ளிருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சினைகளைக் கண்டால் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது.அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்:- 9, 3
துலாம் - இன்று முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாகவிருப்பது நல்லது.அதிர்ஷ்ட நிறம்:- நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்:- 4, 6
விருச்சிகம் - இன்று ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.அதிர்ஷ்ட நிறம்:- சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்கள்:- 5, 6
தனுசு - இன்று வீண் பிரச்சினையால் மனக்குழப்பம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வருமானத்திற்கு குறைவிருக்காது.அதிர்ஷ்ட நிறம்:- நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்:- 3, 7
மகரம் - இன்று வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதிலிருந்த தடை தாமதம் நீங்கும்.அதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்:- 3, 6
கும்பம் - இன்று போட்டிகளை சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளிடம் இருந்து வந்த மனக் கசப்பு மாறும்.அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, வெண் சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 9
மீனம் - இன்று குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த மனக் கிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும்.அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், இள நீலம்அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5, 9
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment