இலங்கைக்கான சுற்றுலாத் தடையை நெதர்லாந்து நீக்கியுள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட பிரசார நடவடிக்கைகளை அடுத்து அந்நாட்டுப் பிரஜைகள் இலங்கை வருவதற்கான தடையை நீக்கியதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு அனர்த்தங்களை அடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பல வெளிநாட்டுகள் தங்கள் பிரஜைகளை இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என ஆலோசனை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், இலங்கையில் தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பி வருகின்றது.
நெதர்லாந்து போன்று ஏனைய நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என இலங்கை எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment