இன்ஸ்டகிராம் செயலியிடம் 20 இலட்சம் பெற்ற இந்தியர்

இன்ஸ்டகிராம் செயலியில் இருந்த தொழில்நுட்ப பிழையைக் கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய தமிழர் ஒருவருக்கு சுமார் 20 இலட்ச ரூபா பணத்தை அந்நிறுவனம் வெகுமதியாக வழங்கியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த கணினி பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியாளரான லக்ஷ்மண் முத்தையாவுக்கே இந்த வெகுமதி கிடைத்துள்ளது.

இன்ஸ்டகிராம் செயலியின் கட்டுமானத்தில் தொழில்நுட்ப பிழை உள்ளதாகவும் அதன் மூலம் எந்தவொரு பயனரின் கணக்கையும் எளிதில் ஹேக் செய்ய முடியும் எனவும் முத்தையா கூறிவந்தார்.

இவ்விவகாரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற அவர், இன்ஸ்டகிராமில் மறந்துபோன பாஸ்வேர்டுகளை திரும்பப்பெறுவதற்காக பயனர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் conformation மெசேஜ் அமைப்பில் தொழில்நுட்ப பிழை இருப்பதாகவும் அதன் மூலம் பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்யமுடியும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையடுத்து அந்த பிழையானது சரிசெய்யப்பட்டுள்ள நிலையில், தவறை சுட்டிகாட்டி உதவியதற்காக அந்நிறுவனம் லக்ஷ்மண் முத்தையாவிற்கு சுமார் 20 லட்ச ரூபாய் பணத்தை வெகுமதியாக வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிடும் புகைப்படங்களை அவருக்குத் தெரியாமலேயே மற்றவர்கள் நீக்கிக்கொள்ளக்கூடிய பாதுகாப்பற்ற தன்மை இருப்பதைச் சுட்டிக்காட்டி ஏற்கெனவே இவர் பண வெகுமதியைப் பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment