உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 42-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களமிறங்கினர். இதில் கிறிஸ் கெய்ல் 7 ரன்னில் கேட்ச் ஆக, அடுத்து இணைந்த இவின் லீவிஸ் மற்றும் ஷாய் ஹோப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அரைசதம் அடித்த இவின் லீவிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஹெட்மயர், ஷாய் ஹோப் உடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. இதில் சற்று அதிரடி காட்டிய ஹெட்மயர் 39 ரன்களிலும், தொடர்ந்து ஆடி அரைசதம் அடித்த ஷாய் ஹோப் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்
பின்னர் களமிறங்கிய நிகோலஸ் பூரன் மற்றும் ஜாசன் ஹோல்டர் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இதில் அரைசதம் அடித்த நிகோலஸ் பூரன் 58 ரன்களிலும், ஜாசன் ஹோல்டர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் பிராத்வெய்ட் 14 ரன்னுடனும், பாபியன் ஆலென் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியில் தவ்லத் ஜட்ரன் 2 விக்கெட்டுகளும், ரஷித்கான், முகமது நபி, சையத் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
0 comments:
Post a Comment