ஈராக் - அமெரிக்கா விமானப்படை தாக்குதலில் 9 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு அவ்வப்போது கொரில்லா போர்முறை பாணியில் அதிரடியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நினேவே மாகாணத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஈராக் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நினேவே மாகாணத்தின் மேற்கு பகுதியில் இன்று அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அப்பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அவர்களின் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment