விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மற்றும் பலர் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், பரத் கம்மா இயக்கி உள்ள படம் 'டியர் காம்ரேட்'. இப்படம் நாளை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
படம் வெளியாவதற்கு முன்பே படத்தைப் பார்த்த பிரபல ஹிந்தி இயக்குனர் கரண் ஜோஹர் நல்ல விலை கொடுத்து ஹிந்தி ரீமேக்கை வாங்கிவிட்டார். இது பற்றிய தகவலை கரண் அவருடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
வியக்க வைக்கும் அற்புதமான காதல் கதை. மிக அற்புதமான நடிப்பு. ஜஸ்டின் பிரபாகரனின் விதிவிலக்கான இசை. அறிமுக இயக்கத்திலேயே அசத்திய பரத் கம்மா, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா அருமை. இந்த சிறந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரிக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படம் ஹிந்தியில் 'கபீர் சிங்' ஆக ரீமேக்காகி 300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. அதனால்தான் இந்த 'டியர் காம்ரேட்' படத்தின் ஹிந்தி ரீமேக்கும் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment