திருடன் போலீஸ், உள்குத்து போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் கார்த்திக் ராஜு. இவர் அடுத்ததாக 'கண்ணாடி' எனும் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சுதீப் கிஷான் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அன்யா சிங் நடித்துள்ளார்.
கருணாகரன், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 12-ந் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிரைலரை நடிகை அமலாபால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
0 comments:
Post a Comment