ஆடை - பார்த்திபன் பதிவு சரியா ?

ரத்னகுமார் இயக்கத்தில், அமலா பால் முதன்மைக் கதாநாயகியாக நடித்து, கடந்த வாரம் வெளிவந்த படம் 'ஆடை'. அந்தப் படத்தைப் பற்றி இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், “PRANKly speaking, ஆடை படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004 - குடைக்குள் மழை வந்தது. வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது. 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும் (eve teasing-ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது” என பதிவிட்டிருந்தார்.

அவருடைய பதிவில், சில டைப்பிங் பிழைகள் இருந்தாலும், அதை கருத்துப் பிழையாக சிலர் புரிந்து கொண்டு 'ஆடை' படம் 'குடைக்குள் மழை' படத்தின் காப்பி என்று கூறி வருகின்றனர். பார்த்திபன் அவருடைய பதிவிலேயே 'மூலக்கரு' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு படங்களும் வெவ்வேறு கதை. அந்த 'பிரான்க்' மூலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இரண்டு படங்களுமே வேறு கதாபாத்திரங்களுடன், வேறு காட்சிகளுடன் சிறிதும் சம்பந்தமில்லாமல்தான் கொடுத்திருக்கிறார்கள்.

அதைக் கருவாக வைத்து 'குடைக்குள் மழை' படம் 2004லேயே வந்துவிட்டது எனக் கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொள்கிறார் பார்த்திபன். வழக்கம் போல அவருடைய குழப்பப் பாணியில் அவர் பதிவிட்டதை, பலரும் 'குடைக்குள் மழை' படத்தின் காப்பி 'ஆடை' என எழுதி 'ஆடை' படத்தைக் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

15 ஆண்டுகளாக 'பிரான்க்'ஐ ஒழிக்க முடியவில்லை என கவலைப்படுகிறார் பார்த்திபன். பிரான்க்கை கடுமையாக எதிர்க்கும் 'ஆடை' படத்திற்கு ஆதரவாக பதிவை வெளியிடாமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் பார்த்திபன். இதற்கு பார்த்திபனே மீண்டும் புரியும்படியான விளக்கத்தைக் கொடுத்தால்தான் 'ஆடை' குழுவினரின் 'பிரான்க்'கிற்கு எதிரான கருத்துக்கு இன்னும் பக்கபலமாக அமையும். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment