ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவித்ததன் பிறகு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது பயனற்றதாகவே காணப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இரு கட்சிகளுக்குமிடையில் ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படவில்லையெனவும் அவர் கூறினார்.
ஒருவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அவர்கள் மாத்திரம் தனித்து தீர்மானித்தால் சுதந்திரக் கட்சியும் சில அதிரடியான தீரமானங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பில் ஒரு தீர்வைக் கண்டதன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதுதான் சிறப்பானதாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment