யூத் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி கேப்டனாக துருவ் சந்த் ஜூரெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான யூத் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப். 3–15ல் நடக்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக உ.பி., விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் சந்த் ஜூரெல் நியமிக்கப்பட்டார்.
அணி விவரம்: துருவ் சந்த் ஜூரெல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சுவேத் பார்கர், தாகூர் திலக் வர்மா, நேஹா வதேரா, அர்ஜுன் ஆசாத், ஷஸ்வத் ரவாத், வருண் லவாண்டே, சலில் அரோரா, கரண் லால், அதர்வா அன்கொலேகர், பங்கஜ் யாதவ், ஆகாஷ் சிங், சுஷாந்த் மிஸ்ரா, பர்னான்க் தியாகி, வித்யதர் பாட்டீல்.
0 comments:
Post a Comment