மன்னாரில் துண்டுப் பிரசுர விநியோகம்

மன்னாரில் துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் சுவரொட்டிகள் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்ரோன் நகர் உட்பட மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் குறித்த துண்டு பிரசுரங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

”சிறு மீனவர்களை பாதுகாக்கின்ற நிலையான மீன்பிடி கொள்கை ஒன்றை உருவாக்கு, ILO வின் மீன்பிடி சமவாயத்தை அடிப்படையாக கொண்டு மீனவனை பாதுகாக்கின்ற பலமான செயல் முறை ஒன்றை துரிதமாக அமுல்படுத்து, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சேர்ந்து நடாத்தும் காணி மோசடிகள் மற்றும் அபிவிருத்தி என்ற பெயரில் மறைந்து அரசு நடத்தும் காணி கொள்ளையை உடனே நிறுத்து”

என இரு மொழிகளில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பொது மக்களின் விளிப்புணர்வுக்காக காட்சிபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment