ஐ.தே.க.யுடன் இன்னும் பேசவில்லை- மஹிந்த மறுப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்தவிதப் பேச்சுவார்த்தையிலும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இதுவரையில் ஈடுபடவில்லையென பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர எம்.பி. தெரிவித்தார்.
மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது எனவும், ஸ்ரீ பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் உள்ளபோது, இவ்வாறான நடவடிக்கையில் சுதந்திரக் கட்சி ஈடுபட்டுள்ளமை விசனத்துக்குரியது எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்து தனியார் வானொலிச் சேவையொன்று வினவியபோதே மஹிந்த அமரவீர எம்.பி. இவ்வாறு பதிலளித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இருப்பினும், பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க வேண்டி வரும்.
சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பித்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment