மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்களின் செலவுகளை குறைக்கும் விதமாக தற்போது நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்றை கட்டியுள்ளது. இதன் திறப்பு விழா சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. இந்த கட்டடத்தை மோகன்லால், மம்முட்டி மற்றும் சீனியர் நடிகர் மது ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் பேசிய மம்முட்டி, “நிறைய புதிய தயாரிப்பாளர்கள் இந்த திரைப்படத்துறைக்குள் நுழைந்து மிகவும் போராட்டங்களை சந்தித்து வருகிறார்கள்.. அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்” என பாராட்டியுள்ளார்.
மோகன்லால் பேசும்போது, “இந்த சமயத்தில், கடந்த 41 வருடங்களில் என்னுடைய திரையுலக பயணத்தில் நான் சந்தித்த தயாரிப்பாளர்களை நினைத்துப் பார்க்கிறேன்.. இந்த தயாரிப்பாளர் சங்கம் மலையாளத் திரையுலகில் முதுகெலும்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என கூறியுள்ளார்.
இந்த புதிய கட்டடத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் மட்டுமல்லாது யுஎப்ஓ மற்றும் க்யூப் நிறுவனங்கள் போல ஒரு படத்தின் மாஸ்டர் காப்பியை உருவாக்கும் தொழில்நுட்ப வசதிகளும் இந்த கட்டடத்தில் அமைய இருக்கிறதாம். இதன் மூலம் தயாரிப்பாளருக்கு குறைந்த கட்டணத்தில் தொழில்நுட்ப சேவை வழங்கப்பட்டு அவர்களது செலவு குறையும் என்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment