பள்ளத்தில் வீழ்ந்தது பத்து வியாபார ஸ்தலங்கள்

ஹற்றன் கினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்குள் சரிந்து வீழ்ந்துள்ளது.

இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவரை மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் சில்லறைக் கடைகள் மற்றும் விடுதிகள் போன்றவை இருந்துள்ளன.

இப் பிரதேசத்தில்  இன்று அதிகாலை  பெய்த கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கின்றது.

இப்பிரதேசத்தின் போக்குவரத்தி தடைகளும் ஏற்பட்டுள்ள நிலையில்,   நாவலப்பிட்டி பிரதான வீதி பாதுகாப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் பொது மக்கள் இயற்கை சீர்கேட்டின் காரணமாக  பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கினிகத்தேனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து  பிரதேசத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். 
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment