திருக்கேதீஸ்வர விவகாரம் ; நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து போராட்டம்

 மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் கட்டுவதற்கு நீதிமன்றம் இடைக்காலதடை உத்தரவு பிறப்பித்தமையை கண்டித்து வவுனியாவில்  கண்டனப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஆயரே பிரதேச சபையை ஆட்சி செய்யாதே ஆள்களை வெருட்டாதே, எம்மவரைப் பங்கு போடாதே , வீடு வீடாத்திரியாதே, அன்பு செய்வதுபோல் ஆணவம் காட்டாதே, மன்னார் ஆயரே புராதனமான பாரம்பரியத்தை சிதைக்காதே, திருக்கேதீச்சர வளைவை மறைக்காதே, ஈழம் எங்கள் பூமி போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.

கந்தசாமி கோவிலிலிருந்து ஊர்வலமாக, வவுனியா மருத்துவமனை ஊடாக மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தனர்.

அமைச்சர் மனோ கணேசனிடம் ஒப்படைப்பதற்கான மனுவை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளித்தனர்.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இந்து ஆலயங்களின் ஒன்றியம்,வெங்கல செட்டிகுளம் இந்து ஆலயங்களின் ஒன்றியம், வவுனியா வடக்கு இந்து ஆலயங்களின் ஒன்றியம் என்பன இணைந்து இப் பேரணியை நடத்தின.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment