ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனனின் புதிய படம்

'மின்னலே', 'காக்க காக்க', 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'என்னை அறிந்தால்' எனத் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர், இயக்குநர் கெளதம் மேனன். இயக்குவது மட்டுமல்லாமல், படங்களைத் தயாரிக்கவும் செய்திருக்கிறார்."எனை நோக்கி பாயும் தோட்டா" படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறது..!
சமீபகாலமாக கடன் நெருக்கடியால் அவரது படங்களை வெளியிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா', விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படங்கள் இரண்டும் கடன் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளன.
இதனால் பெரும் அவதிக்குள்ளானார், கௌதம் மேனன். அவருக்கு தற்போது இந்தப் பிரச்னைகள் அனைத்தும் முடியும் காலம் வந்துவிட்டது. வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் கௌதம் மேனனின் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளது. படம் இயக்குவதற்காக கௌதம் மேனனின் தடையாக இருத்த கணிசமான கடன் தொகையைத் தயாரிப்பு நிறுவனமே கொடுத்து கௌதம் மேனனை விடுவித்திருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் புதிய படத்தில், ஐசரி கணேஷின் தங்கை மகன் வருண் கதாநாயகனாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.வேதிகாவுக்கு ஜோடியாக 'விநோதன்' என்ற படத்தில் வருண் அறிமுகமாகவிருந்த நிலையில் 'வனமகன்', 'போகன்', 'எல்.கே.ஜி' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தப் படத்திற்காக பிரத்யேகமாக பிரான்ஸில் ஒரு டீஸரும் ஷூட் செய்து வந்திருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பும் சென்னையின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது. கௌதம் மேனனின் படங்களை வெளியிடுவதற்கு ஐசரி கணேஷ் பெரிய அளவில் உதவுவதாகவும் சொல்லப்படுகிறது. கடன் தொல்லைகள் தீர்ந்து மீள்வாரா கௌதம் மேனன் என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment