பேஸ்புக், இன்ஸ்ட்கிராம், வட்ஸ்அப் முதலான சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் சர்வதேச ரீதியில் நேற்று ஏற்பட்டிருந்த தடங்கல் நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்ட்கிராம், வட்ஸ்அப் முதலான சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதில் நேற்று நள்ளிரவு முதல் உலகலாவிய ரீதியில் தடங்கல் ஏற்பட்டது. வலைதளங்களில் பராமரிப்பு பணிகளில் இடம்பெற்றபோது, நேற்றைய தினம் குறித்த தடங்கல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த தடங்கல் நிலை சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment