உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.
14 ஓட்டங்களிலேயே 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா அணி. 49 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியாவால் 223 ஓட்டங்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
224 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டங்களைச் சேர்த்தது.
இதனால் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அந்த அணி, 33ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் ஐம்பது ஓவர் உலகக் கோப்பையில் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
0 comments:
Post a Comment