ஓய்வு குறித்து டோனி எங்களிடம் ஏதும் கூறவில்லை: விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ்.டோனி ஓய்வு குறித்து எங்களிடம் ஏதும் கூறவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் சுருண்டு 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டோனி கடைசி வரை போராடினார். ஆனால் 72 பந்தில் 50 ரன்கள் சேர்த்து ரன்அவுட் ஆனார்.ஜடேஜா ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய போது, டோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன்அவுட்டாகி வெளியேறும்போது மிகுந்த மன உளைச்சலுடன் வெளியேறினார். இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி இதுகுறித்து கூறுகையில் டோனி அவருடைய ஓய்வு குறித்து எங்களிடம் ஏதும் கூறவில்லை’’ என்றார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment