மேயாதமான் ரத்னகுமார் இயக்கத்தில், அமலாபால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. டீசரில் வெளியான அமலாபாலின் நிர்வாணக்காட்சி, டிரைலரில் இருந்த முத்தக்காட்சி என இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் இன்று வெளியாக இருந்த படம் வெளியாகவில்லை.
தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னை காரணமாக தியேட்டர்களுக்கு சென்று சேர வேண்டிய கேடிஎம்கள் சென்று சேரவில்லை. இதனால் படம் வெளியாகவில்லை. படத்தை காண ஆவலுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
0 comments:
Post a Comment