பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர், எதிர்காலத்தில் பிரிட்டனில் தங்க உள்ளதாக தெரிகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆமிர் 27. இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர், கடந்த 2010ல் ‘ஸ்பாட்–பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதால் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதன்பின், தேசிய அணிக்கு மீண்டும் திரும்பினார். 2017ல் சாம்பியன்ஸ் டிராபி வெல்ல கைகொடுத்தார். இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில், (8 போட்டி, 17 விக்.,) ஜொலித்தார். சமீபத்தில், டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், ஆமிர் இங்கிலாந்தில் குடியேறப்போவதாக தெரிகிறது. இது குறித்து ஆமிரின் நண்பர் ஒருவர் கூறுகையில்,‘‘
முகமது ஆமிர் கடந்த 2016ல் பிரிட்டனை சேர்ந்த நர்கீஸ் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர் அடிக்கடி பிரிட்டன் சென்று வருகிறார். கடந்த ஆண்டு கவுன்டி சாம்பியன்ஷிப்பிலும் விளையாடினார். வாழ்க்கைத்துணை இருப்பதன் அடிப்படையில், பிரிட்டன் ‘விசா’ பெற முடியும். இதன் மூலம், 30 மாதங்கள் இவரால் இங்கிலாந்தில் தங்க முடியும். எதிர்காலத்தில் இங்கிலாந்தில் நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளார்,’’ என்றார்.
0 comments:
Post a Comment