பயணிகள் மீது பொலிஸார் அடாவடி ; வவுனியாவில் சம்பவம்

பயணிகளை இறங்கவிடாது  பேருந்தின் இரு கதவுகளையும்  மூடி பொலிஸார் பயணிகள் மீது அடாவடி நடவடிக்கையில், ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் வவுனியாப் பகுதியில் இன்று காலை நடந்துள்ளது.

புதிய பேருந்து நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களாக சோதனைச்சாவடி   அமைத்துள்ள பொலிஸார் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் மீது சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று காலை வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து பயணிகளுடன் வந்த பேருந்து, பேருந்து நிலையத்துக்குள் சென்றுள்ளது.

பேருந்து உட்செல்லும் போது சோதனைச் சாவடியில் இல்லாத பொலிஸார் பேருந்து நிலையத்துக்குள் சென்று குறித்த பேருந்தின் கதவுகளை மூடி அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயணிகளையும் இறக்கிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வேறு எந்த மாவட்ட பேருந்து நிலையங்களிலும் இவ்வாறான சோதனை சாவடிகள் இல்லை. வவுனியாவில் மட்டும் ஏன் இவ்வாறான செயற்பாடுகள் என பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் அமைதி நிலவுகின்ற போதிலும் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொலிஸாரின் சோதனைச்சாவடி அகற்றப்படவில்லை.

அண்மையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தானும் குறித்த சோதனைச்சாவடியை உடனே அகற்றி விடுமாறும் நாட்டில் சீரான நிலை நிலவுகின்றபோது, இச் சோதனைச்சாவடி தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment