இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் அவர் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத விஜய் சங்கர், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பிடித்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டத்திற்கு தயாராகும்போது, கலீல் அகமது வீசிய பவுன்சர் பந்து விஜய் சங்கரின் முழங்கையை பலமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment