பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் மீரா மிதுன், இயக்குனர் சேரன் இடையிலான சர்ச்சையை குறும்படம் போட்டு தீர்த்து வைத்தார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன். அப்போது பேசிய சரணவன், பெண்களை உரசும் எண்ணத்தில் பேருந்துகளில் சென்றிருக்கிறேன் என்றார். அதற்கு பார்வையாளர்கள் கை தட்டினார்கள், கமல்ஹாசன் அதற்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சை போய்க் கொண்டிருக்கிறது.
'மீ டூ' சர்ச்சை மூலம் பரபரப்பை ஏற்படுத்திய பின்னணிப் பாடகி சின்மயி இது பற்றி பதிவிட்டு அவருடைய கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். வழக்கம் போலவே, இதுவும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து சரவணன் நேற்றைய நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டார்.
சரவணன் மன்னிப்பு கேட்டதை அடுத்து, ஞாயிறு அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சரவணன் அப்படிப் பேசியதற்கு உடனே எந்த கண்டனத்தையும் தெரிவிக்காத கமல்ஹாசனை நோக்கி இந்த சர்ச்சை தற்போது திரும்பியுள்ளது. அவர் இதற்காக தனியாக மன்னிப்பு கேட்பாரா அல்லது வரும் வார நிகழ்ச்சியில் இதற்கு தனி விளக்கம் அளிப்பாரா என்று தெரியவில்லை. அதுவரை இதைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டுதானிருக்கும்.
0 comments:
Post a Comment