இந்தியன் 2, தலைவன் இருக்கிறான், தேவர்மகன் 2, நாளை நமதே, மருதநாயகம் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது ஐந்து படங்கள் பற்றி அடுத்தடுத்து அப்டேட்டுகளாகக் கொடுத்து ரசிகர்களை அசத்தி விட்டார் கமல்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் போட்டியாளர்களுடன் நடிகர் கமல் உரையாடுவது வழக்கம். அப்போது தன்னைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் வெளியிடுவார். இதற்காகவே வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்காதவர்கள் கூட, வார இறுதி நாட்களில் கமலுக்காகப் பார்ப்பார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் தனது புதிய படங்கள் பற்றி பல அப்டேட்டுகளைக் கொடுத்துள்ளார் கமல். சனிக்கிழமையன்று இந்தியன் 2 மற்றும் தலைவன் இருக்கிறான் படங்களுக்காக தனது மீசையை எடுத்ததாக கமல் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக ஞாயிறு நிகழ்ச்சியில் ‛தேவர்மகன்' படத்தை ரீமேக் செய்து, அதில் சிவாஜி வேடத்தில் நடிக்க விரும்புவதாகக் கூறினார். மேலும், எம்.ஜி.ஆரின் ‛நாளை நமதே' படத் தலைப்பை மட்டும் வாங்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
‛மருதநாயகம்' எப்போது வரும் என்ற போட்டியாளரின் கேள்விக்கு, 'இதே கேள்வி தான் தன் மனதிலும் இருப்பதாக' கூறிய கமல், அது பற்றி தான் வேறு திட்டம் வைத்திருப்பதாகக் கூறினார்.
இந்த வாரம் கமல் தனது ஐந்து படங்கள் பற்றி அப்டேட் கொடுத்துள்ளதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment