புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் பூங்கா திறந்து வைப்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில், அமைக்கப்பட்ட சிறுவர்  பூங்கா  நேற்று முல்லை.மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி உமாசங்கரால்  திறந்து வைக்கப்பட்டது

சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கோடும் மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கோடும் குறித்த சிறுவர் பூங்கா  மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டது.

ஆதார மருத்துவமனைப்  பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச கல்விமான்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் 1988 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரம் கல்வி பயின்று புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் இப் பூங்கா அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment