தனிமையில் தவித்தேன்! தமிழக வீரர் அஸ்வின்

ஹிந்தி பேச தெரியாததால் தனிமையில் தவித்ததாக தமிழக வீரர் அஸ்வின் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது, ஹிந்தி மொழி தெரியாததால் தனிமையில் தவித்ததாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது, விளையாட செல்லும் ஒவ்வொரு நாளும் அழுது கொண்டிருப்பேன்.

ஹிந்தி எழுதவும், படிக்கவும் தெரிந்த எனக்கு பேச தெரியாது. இதனால் விளையாடும் போது பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் தவித்தேன். சில வீரர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறுகின்றனர்.


வாய்ப்பு நம்மை தேடி வராது. நாம் தான் அந்த வாய்ப்பை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். பறவைகள் போல் வானத்தில் பறக்க ஆசைபட வேண்டும்.

இதுபோதும் என்று இருந்து விடக்கூடாது. இலக்கை தாண்டிய பயணங்களும் நம் வாழ்க்கையில் இருக்கும். அதனால் எதற்கும் கவலைப்படாமல் முன்னேறி செல்ல வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment