திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தேசிய விருதையும் பெற்ற ஒரே ஹீரோ விக்ரம்.
இவர் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கதாபாத்திரங்கள் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமாகக் காட்டிக்கொள்ளுவார்.
இந்த நிலையில்,
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அடுத்து விக்ரம் நடிக்க உள்ள படத்தில், 25 தோற்றங்களில் அவர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது விக்ரமிற்கு 58 ஆவது படம்.
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு 'நவராத்திரி' படத்தில் 9 வேடங்களில் சிவாஜிகணேசன், 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் 10 தோற்றங்கள், விரைவில் வெளிவர உள்ள 'கோமாளி' படத்தில் 10 தோற்றங்களில் ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment