யாழ்.பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்தி சீரமைப்புச் செய்யும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2 ஆயிரத்து 300 மீற்றர் நீளமான ஓடுபாதையும் இதன்போது அமைக்கப்படவுள்ளது.
சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், பிராந்திய மட்டத்தில் வணிக விமான நிலையங்களை இயக்குவதற்கு, பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை ஆகிய மூன்று உள்நாட்டு விமான நிலையங்களைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறித்த மூன்று விமான நிலையங்களும், பிராந்திய விமானப் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு, இந்த விமான நிலையங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிறுவும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
0 comments:
Post a Comment