வேலையற்ற பட்டதாரிகளால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
அரச நியமனம் வழங்குமாறு கோரி பட்டதாரிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
வெளிவாரி, உள்வாரி என தரம் பிரித்து வேலை வாய்ப்பினை வழங்க வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த அரசு நல்லாட்சி அரசு என நிரூபிப்பதாயின் வேலைற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
0 comments:
Post a Comment