சோமாலியாவில் கார்குண்டு தாக்குதல் - 8 பேர் உயிரிழப்பு


சோமாலியாவில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர்.

அல்கொய்தா ஆதரவு பெற்ற அல்ஷபாப் பயங்கரவாதிகள் ஆயுத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மத அடிப்படையிலான அரசை நிறுவ போராடி வருகின்றனர். இந்த நிலையில், அங்கு தலைநகர் மொகாதிசுவில் அதிபர் மாளிகை அருகே நேற்று வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.

இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

மீட்பு படையினர்  மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment