சாவகச்சேரியில் புதிதாக பிளாஸ்ரிக் கழிவு மீள்சுழற்சி நிலையம்

சாவகச்சேரி நகரசபையில் பிளாஸ்ரிக் கழிவு மீள்சுழற்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபைக்கு அண்மையில் விஜயம் செய்த வேள்ட்விஷன் அதிகாரிகள் நகரசபையினால் மேற்கொள்ளப்படுகின்ற திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி செயற்பாட்டை பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது தரம் பிரிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் கழிவுபொருட்களை கொள்வனவு செய்வதற்கு உள்ளூர் பிளாஸ்ரிக் மீள்சுழற்சி நிறுவனங்கள் போதியவில் இல்லை. அதனால் தரம் பிரிக்கப்பட்ட அதிகளவான பிளாஸ்ரிக் பொருட்கள் தேங்கிக்கிடப்பதாக நகராட்சி மன்ற தவிசாளர் சிவமங்கை இராமநாதனால் வேள்ட்விஷன் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியிலேயே பிளாஸ்ரிக் கழிவுகளை துகள்களாக்கி மீழ்சுழற்சிக்கு ஏற்றுமதி செய்கின்ற நிலையம் ஒன்றை அமைத்து அதனை பொது அமைப்பு ஒன்றினால் இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வேள்ட்விஷன் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்ரிக் மீள்சுழற்சி நிலையம் இயங்க ஆரம்பித்தால் தென்மராட்சியில் பிளாஸ்ரிக் கழிவுகள் குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.



Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment