திட்டமிட்ட குற்றச்செயல் களில் ஈடுபடும் குழுவினால், மாவனல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில்
கலாசார மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளூடாக உடன் விசாரணை நடத்தப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உடைத்து சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைகள் தொல் பொருள் பெறுமதிமிக்கவை அல்ல என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களால் வழிபடப்பட்டுவந்த புத்தர் சிலைகளை மீள நிறுவுவது முக்கியமானது எனவும் அதற்கான நடவடிக்கையை தாமதமின்றி முன்னெடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்குத் தேவையான நிதி தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது.
0 comments:
Post a Comment