ஹட்டன் - டிக்கோயா போடெய்ஸ் 30 ஏக்கர் தோட்டத்தின் லயன் குடியிருப்புக்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட இந்த தீப்பரவல் காரணமாக குறித்த குடியிருப்பில் உள்ள 24 வீடுகளும் சேதமாகியுள்ளன.
எனினும் இதன்போது உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து நிர்க்கதியான 24 குடும்பங்களையும் சேர்ந்த மக்கள் தற்காலிகமுகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தோட்ட முகாமைத்துவமும், தோட்டமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment