கடலில் மூழ்கி வடமராட்சி மீனவர் உயிரிழப்பு


கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  மீனவர் ஒருவர் அலையில் இழுபட்டுச் சென்று உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தாளையடி, வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த அருளானந்தம் ஜோன்சன் (வயது-46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடல் நீரில் நின்றபோது  அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். 

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருதங்கேணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும்  சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சீரற்ற காலநிலை காரணமாக கடற்பிரதேசங்களில் அலைகளின் வேகம் அதிகமாக உள்ளது. 

அதனால் கடற்கரைக்குச் செல்வோர் அவதானத்துடன்நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment