அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரியுங்கள் - மத்தும பண்டார

 தற்போதைய அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 இற்கும் அதிகமாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

 வானொலி சேவையொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே  அமைச்சர்  இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

இலங்கையில் 58 அமைச்சர்களைக் கொண்ட பெரிய அமைச்சரவையொன்று மகிந்தவின் காலத்திலேயே காணப்பட்டது. நாம் சொல்கின்றோம் இந்த அரசை கொண்டு செல்ல இடமளியுங்கள் என்று. 

அமைச்சர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 536 ஐத் தாண்டினாலும் பிரச்சினையில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியான அதிகாரம் இருக்குமாயின் 30 அமைச்சர்கள் என்பது சரிதான். 

ஆனால் ஏனைய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் போது 30 அமைச்சர்கள் என்ற மட்டுபாடு கடினமானது.

ரவீந்திர சமரவீர, சரத் பொன்சேகா, வசந்த சேனாநாயக்க, ரங்கே பண்டார, பௌசி, பியசேன கமகே இவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் -என்றார்.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment