10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரை

ஹற்றன் - கொட்டகலை பிரதேசத்தின் ஈரநிலப் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலில் சுமார் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியின் டெவோன் நீர்வீழ்ச்சியின் பிரதான நீரேந்து பிரதேசத்தில் இன்று காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டது.

இதனையடுத்து , ஹற்றன் - டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment