இந்திய அணியை தோற்கடித்தது நியூஸிலாந்து

இந்தியா அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஹமில்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி இந்திய அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 30.5 ஓவர்கள் நிறைவில் 92 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக யுஸ்வேந்திர மற்றும் சஹால் ஆட்டமிழக்காது, 18 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும், கொலின் டி கிரெண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 93 என எளிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 14.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதில் நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஓட்டமாக, ஆட்டமிழக்காது ரோஸ் டெய்லர், 37 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக வெற்றிக்கு துணைநின்ற, வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்திய அணி, ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி வெலிங்டனில் நடைபெறவுள்ளது.





Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment