மத்திய பிரதேசம் போபாலில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு சென்றிருந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தையடுத்து, அவரது சகோதரர் அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் விட்டுள்ளார்.
தங்கை வீட்டில் ஓய்வெடுக்கட்டும், நீ பள்ளிக்கு செல் என்று சகோதனை அனுப்பிவைத்துள்ளார் தந்தை. அதன்பின்னர், தனியாக அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் தந்தை.
வெளியில் சென்றிருந்த தாய், வீட்டுக்கு திரும்பியபோது அழுதுகொண்டிருந்த மகளை பார்த்து, என்ன நடந்தது என கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அழுதுகொண்டே மகள் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பொலிசில் புகார் அளித்ததையடுத்து, தந்தை கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியில், தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
0 comments:
Post a Comment