ஆன்மீக தலைவருக்கு காதல் வலை வீசிய இளம்பெண்: வெளியான திடுக்கிடும் தகவல்!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பிரபல ஆன்மீக தலைவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் செல்வாக்கு மிகுந்த ஆன்மீக தலைவராக வலம் வந்தவர் 50 வயதான பைய்யு மஹராஜ்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி இந்தூரில் உள்ள இவரது இல்லத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மிகுந்த அரசியல் செல்வாக்கு கொண்ட பைய்யு மஹராஜ் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது.
பைய்யு மஹராஜ் சதி திட்டத்தால் கொல்லப்பட்டதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் ஆன்மீக தலைவரின் தற்கொலைக்கு காரணமான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பைய்யு மஹராஜின் முக்கிய சீடர்களில் ஒருவரான பாலக் புரானிக் என்பவரின் தொடர் மிரட்டலுக்கு பயந்தே தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
மன அழுத்தம் கட்டுப்படுத்துவதாக கூறி பாலக் புரானிக் அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகளை பைய்யு மஹாராஜுக்கு வழங்கியுள்ளார்.
மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து 25 வயதான பாலக் புரானிக் என்ற யுவதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் மிகுந்த அரசியல் செல்வாக்குடன் கோலோச்சிய பைய்யு மஹாராஜ் மீது காதல் வயப்பட்டுள்ளார் பாலக் புரானிக்.
தொடர்ந்து தமது திருமண கோரிக்கையை நிராகரித்து வந்த பைய்யு மஹாராஜை அவர் மிரட்டியும் வந்துள்ளார்.
மொத்த ரகசியங்களையும் வெளியிடுவேன் எனவும், தம்மை பாலியல் அடிமையாக வைத்திருந்ததாக பொலிசாரிடம் புகார் அளிப்பேன் எனவும் பாலக் மிரட்டியுள்ளார்.
பைய்யு மற்றும் பாலக் இருவரும் சமூக வலைதளத்தில் மேற்கொண்ட சேட் தகவல்களை பொலிசார் சேகரித்துள்ளனர்.
முன்னாள் மொடலான பைய்யு மஹாராஜின் இயற்பெயர் உதய் சிங் தேஷ்முக். திருமணம் முடித்து ஒரு மகளும் இவருக்கு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment