இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் புதுபெண் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் புரி நகரை சேர்ந்தவர் லஷ்மிகாந்த். இவருக்கும் சர்மிஷ்தா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு சர்மிஷ்தாவை அவர் கணவர் லஷ்மிகாந்த் மற்றும் குடும்பத்தார் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் உடல் முழுவதும் காயங்களுடன் சர்மிஷ்தா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
இதையடுத்து தங்கள் மகள் சர்மிஷ்தாவை, லஷ்மிகாந்த் மற்றும் குடும்பத்தார் அடித்து கொலை செய்துவிட்டதாக சர்மிஷ்தாவின் குடும்பத்தார் கண்ணீருடன் பொலிஸ் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரித்த பொலிசார் லஷ்மிகாந்த் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சர்மிஷ்தாவை கணவர் மற்றும் குடும்பத்தார் அடித்து கொன்றது தெரியவந்தது.
தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment