2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 72 ஓட்டத்துடன் ஆஸி!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை குவித்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 72 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்டு போட்­டிகள் கொண்ட முரளி - வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரின் முத­லா­வது போட்டி இன்று காலை 8.30 மணிக்கு பிரிஸ்பன் கப்பா மைதா­னத்தில் ஆரம்பமானது. 
பகலிரவு ஆட்டமாக இடம்பெறும் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதற்கிணங்க ஆடுகுளம் புகுந்த இலங்கை அணி வீரர்கள் சோபிக்காத காரணத்தினால் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 56.4  ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸுக்காக 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
அதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 25 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 72 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.
அவுஸ்திரேலிய அணி சார்பில், ஜோ பேர்ன்ஸ் 15 ஓட்டத்துடனும், உஷ்மன் கவாஜா 11 ஓட்டத்துடன் ஆட்டமிழந்த நிலையில்  மார்கஸ் ஹாரிஸ் 40 ஓட்டத்துடனும் நேதன் லியோன் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லக்மால் மற்றும் தில்றூவான் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment