அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்சுற்று முடிந்த நிலையில் 2வது சுற்று ஆரம்பம்!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி முதல்சுற்று முடிந்ததை அடுத்து 2வது சுற்றில் புதிய வீரர்கள் காளைகளை தழுவி வருகின்றனர்.
மேலும் முதல் சுற்றில் 81 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. 75 வீரர்கள் பங்கேற்றனர்.
இதுவரை ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு முகாமில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. மாடுகளின் கொம்பு, வாலைப் பிடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லைக் கோட்டை தாண்டவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளைப் பின்பற்ற விழாக் கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் 2-வது சுற்றில் 691 காளைகள் மற்றும் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணிக்காக 1,095 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆம்புலன்ஸ்- தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உ்ளளனர். மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கக் காசு, தங்கச் சங்கில், பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை விழா கமிட்டியினர் வழங்கினர். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட காளைகளை பிடிக்க கூடாது என விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டை முன்னிட்டு போலீசார் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். காளைகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்புக்காக களம் முழுவதும் தேங்காய் நார்கள் பரப்பபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment