ஒரே ஆண்டில் 9000 அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மனி!

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஜேர்மனி சுமார் 9000 அகதிகளை பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் மட்டும், 8,658 அகதிகளை, ஜேர்மனி பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக பிரபல பத்திரிகை ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
2017ஐ ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறிப்பிடத்தக்க அளவிலானதாகும். 2017இல் 7,102 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்டுக் கொண்டதன்பேரில் உள்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்ட மூன்று பேரில் ஒரு அகதி, ஜேர்மனியிலிருந்து இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அதற்கு நேர்மாறாக, ஹங்கேரிக்கு ஒரு அகதி கூட திருப்பி அனுப்பப்படவில்லை, கிரீஸுக்கு வெறும் ஐந்தே அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் விதிகளின்படி, எந்த நாட்டில் ஒரு அகதி முதலில் வந்திறங்குகிறாரோ, அந்த நாடுதான் அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்.
ஜேர்மனிக்கு ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடையில் 51,558 விண்ணப்பங்கள் வந்தன, அவற்றில் 35,375 ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கடந்த கோடையில் ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer இத்தாலியையும் கிரீஸையும் அங்கு முதலில் பதிவு செய்த அகதிகளை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment